Saturday, September 8, 2012

நொய் பொங்கல் ( or ) புளிப் பொங்கல்

நொய் பொங்கல் ( or ) புளிப் பொங்கல்:- By:- Savithri Vasan

அரிசி குருனையில் செய்யும் பலகாரம் இது

முன் காலங்களில் நெல் அறுவடை செய்து  அதை
அரிசியாக மாற்றும் பொழுது  இந்த குருணை (நொய் )
தாராளமாக கிடைக்கும்.  இன்றோ நாம் அரிசியை
மிஷினில் நொய்யாக  உடைத்து இந்த பொங்கல் செய்யும்
நிலையில் உள்ளோம்.



தேவையானவை:- அரிசி நொய்

புளி  கரைசல் , மஞ்சள் பொடி , பெருங்காயம்
உப்பு , கருவேப்பிலை


வெங்கலப்பானையில் சிறிது எண்ணை விட்டு
பெருங்காயம், கடுகு, மிளகாய் வத்தல், உளுத்தம் பருப்பு
பச்சை மிளகாய் , கருவேப்பிலை , தாளித்து
கரைத்து வைத்த புளி கரைசலை இதில் விட்டு
நன்றாக கொதிக்கவிடவும் . தளைத்து கொதித்ததும்
அரிசி நொய்  அதில் போட்டு நன்றாக கிளறவும்



சுவையான , சற்று புளிப்புடன் கூடிய நொய் பொங்கல்/
புளிப்பொங்கல்  தயார்

இதுலயும் அடிக்காந்தால் கிடைக்கும் அதை சாப்பிட்டால்
சுவைக்கும் .

என்ன சார்  நொய் , நொய்ன்றீங்க ......... கொஞ்சம்
நொய்  பொங்கல் சாப்பிடுங்க எல்லாம் சரியாய்டும்


No comments:

Post a Comment