Thursday, September 6, 2012

ஷெல்ப் அடிச்சு போச்சு" (Expiry Date)- Tips


ஷெல்ப் அடிச்சு போச்சு" :- By:- S.S.Vasan

சமையல் அறையில் ஒரே பரபரப்பு
அப்பா சாப்பிட உட்கார்ந்து விட்டார்
அம்மா தட்டில் சாதம் போட்டு , பருப்பு
போட்டு , நெய் விட்டு , வெண்டைக்காய்
காய் போட்டு எல்லாம் ஆச்சு , முதல்




பிடி வாயில் போட்டதும் வந்தது
ஒரு விக்கல்........... , அவ்வளவுதான்
ஆளாளுக்கு ஒரு மூலையில் இருந்து
ஓடி வந்தோம் , அப்பா தண்ணி குடிப்பா
தண்ணி குடிப்பா என்று ஏகோபித்த
குரல்கள்.

பக்கத்தில் தண்ணீர் இல்லை ,

அம்மா
பதை பதைத்துப் போனாள்

கீதா உன்னை அப்பவே அப்பாக்கு
தட்டு வைக்கும் போது தண்ணி
வைக்க சொன்னேனே ,

இது .......
அப்பாவின் கோபத்தை மேலும்
அதிகமாக்கியது . சரி சரி விடுங்க
என்னைக்கு நெஞ்சு அடைக்கப் போகுதோ
தெரியலை , அப்பாவின் கோபமான
வருத்தம் .

சாம்பார் சாதம் சாப்பிடப் போறார்
தொட்டுக்க கொஞ்சம் ஊறுகாய்
போடு !!!!!

அம்மா ஊறுகாய் ஜாடியை திறந்து
எலுமிச்சங்காய் ஊறுகாய் எடுத்து
போட்டாள் , அப்பா ஒருவாய்
சாப்பிட்டதும் ,

மூக்கின் மேல் கோபம் , ஊறுகாயை அப்படியே
ஒதுக்கி வைத்தார் , அம்மாவை
ஏறிட்டு ஒரு பார்வை !!!!!!!

அம்மா செய்வதறியாது திகைத்தாள்
தான் போட்ட ஊறுகாய் ஜாடியை
எடுத்து பார்த்தாள் , மூக்கின் அருகே
வைத்துப் பார்த்தாள், அம்மா சொன்ன
வார்த்தைகள் .......

"ஷெல்ப் அடிச்சு போச்சு"

இந்த வார்த்தை "ஷெல்ப் அடிச்சு போச்சு"

இதுதாங்க இன்றைய ஷெல்ப் லைப் (Shelf Life /
எக்ஸ்பயரி டேட் (Expiry Date)

சாப்பிட உட்காரும்போது , பக்கத்தில்
தண்ணி வைங்க , மறக்காதீங்க

வீட்டில் (இருக்கும்) தயாரித்த/ வாங்கிய பொருட்கள் ,
ஊறுகாய் வகைகளை , அதன் முதிர்வு
தேதியை கவனித்து , அதற்க்கு முன்னரே
உபயோகப் படுத்தி விடுங்கள் .......

ஷெல்ப் அடிச்சு போச்சுன்னா(Expired) துக்கிப்போடுங்க !!!!!

மருந்து கடைக்காரன் மட்டும் பதுக்கல் பேர்வழி இல்லை 
நாமும் தான் .......... மறதி  என்னும் நோயால் 

No comments:

Post a Comment