Thursday, September 6, 2012

கொத்தமல்லிவரை (தணியா) பொடி

கொத்தமல்லிவரை (தணியா) பொடி  :- By:- Savithri Vasan

இந்த பொடி வீட்ல இருந்தா சமையல் களை  கட்டும்ங்க
எப்டின்னு கேக்கறீங்க , நல்ல புரியுது எனக்கு

தணியா  இல்லாத சமையலே இல்லைன்னு சொல்லலாம்

முதல்ல குறிப்ப  சொல்லறேன்  அப்புறம்  பயன்பாட்டை
தெரிஞ்சுக்கோங்க


தேவையானவை:-

தணியா :- 200 கிராம்
மிளகாய்வற்றல்:- 15
உளுத்தம்பருப்பு :- 50 கிராம்
பெருங்காயம் : சிறிது
உப்பு : தேவைக்கேற்ப
புளி : நெல்லிக்காய் அளவு


முதல்ல உளுத்தம் பருப்பை தனியாக வறுத்து
மிக்சியில் ஓன்று இரண்டாக உடைத்து வைத்துக்கொள்ளவும்


பிறகு: பெருங்காயம், தணியா, மிளகாய் வற்றல் ,
தனித்தனியாக  வாணலியில் சிறிது என்னை விட்டு
வறுத்து எடுக்கவும்.

மிக்சியில் : புளி , பெருங்காயம், உப்பு , மிளகாய் போட்டு
அரைத்து விட்டு அதனுடன் தணியா சேர்த்து நன்றாக
அரைக்கவும்.

இதனுடன் முன்னமே உடைத்து  வைத்த உளுத்தம் பருப்பை
சேர்க்கவும்;



இதன் பயன்கள்:-   வீட்ல சமையல் சுமாராக இருக்கும்
நாட்களில்  கொஞ்சம் சாதம் போட்டு , இந்த பொடி போட்டுக்கொண்டு
சாப்பிடலாம் .

மோர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள தேனாக இனிக்கும்

தோசைக்கு மிளகாய்ப்பொடி தீர்ந்துவிட்டால் இது கை கொடுக்கும்
ஆபத் பாந்தவன்

முக்கியமான உபயோகம் ஒன்னு இருக்கு:

எந்த காரக்கறி செஞ்சாலும் இந்த  பொடிய  அந்த காய் வதக்கும்
போது  கடசியா கொஞ்சம் மேல தூவி ஒரு பெரட்டு ,பெரட்டி
இறக்குங்க .   அரைச்சுவிட கறி  செஞ்ச நிறைவு இருக்கும்.


என்று தணியும்  இந்திர சுதந்திர தாகம் .....அன்று பாடிய பாட்டு
அனா இன்று  நீங்க பாடுவீங்க , என்று தணியும் இந்த தணி யா பொடி
மோகம் அப்டின்னு ? ஒரு முறை சாப்பிட்ட பின்


No comments:

Post a Comment