Wednesday, September 12, 2012

நார்த்தங்காய் பச்சடி

நார்த்தங்காய் பச்சடி



நார்த்தங்காய் 1
புளி  கொட்டை பக்கு அளவு
மிளகாய் வத்தல்   2
வெல்லம்          1 கப்
மஞ்சள் சிட்டிகை அளவு
உப்பு சிட்டிகை அளவு
பெருங்காயம்
கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்க




நார்த்தங்காயை நன்றாக துண்டு துண்ட்டாக நறுக்கி
 (கொட்டை  நீக்கி விடவும் )
புளி ஒரு பாத்திரத்தில் கரைத்து வைத்துக்கொள்ளவும்

வாணலியில் பெருங்காயம் பொரித்து கடுகு உளுத்தம் பருப்பு
தாளித்து அதில் மிளகாய் சேர்த்து . இதை நார்த்தங்காய் 
ஒரு பாத்திரத்தில் போட்டு ,  வெல்லம் சேர்த்து, 1 டம்பளர்
தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும் . மஞ்சள் பொடி
உப்பு,சேர்த்து  கொதித்து கெட்டியாக (மாங்காய் பச்சடி பதம்)
வந்ததும் இறக்கிவிடவும் .




இவ்வளவுதான் , ஆனா இதன் சுவை இவ்வளவுன்னு
சொல்லி மாளாது


'நண்டு சிண்டு நாரத்தங்கா' சப்டும்ன்னு சொல்லறாங்க அப்ப
நாம சாப்ட மாட்டோமா  ??


No comments:

Post a Comment