Monday, September 3, 2012

நாலடியார்


நாலடியார் -- (349/400)
--------------------------------------
'பழையார் இவர்' என்று பன்னட்பின் நிற்பின்,
உழையினார் ஆகுவர், சான்றோர்; -- விழையாதே,
கள்ளுயிர்க்கும் நெய்தல் கனைகடல் தண்சேர்ப்ப!
எள்ளுவர், கீழா யாவர்.

பொருள்:- தேன் ஒழுகும் நெய்தல் மலர்களை உடைய
ஒலிக்கின்ற கடலின் குளிர்ச்சியான கரையை உடையவனே!
தமக்குப் பின்னால் வந்து ஒருவர் பணிந்து  நின்றால் , இவர்
பல நாட்கள் பழகியவர் என்று விரும்பி, அவரிடம், சான்றோர்
அன்பு உடையவர்களாக விளங்குவார்கள். ஆனால், கீழ்மக்களோ,
அவர் பின்னால் ஒருவர் வந்து பணிந்து நின்றால் அதை
விரும்பாமல், அவரை தமக்கு அடங்கியவர் என்று எண்ணி,
அவரி இகழ்ந்து பேசி, எள்ளி நகயாடுவர்

No comments:

Post a Comment