Thursday, September 6, 2012

பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர்



நரசிம்மர் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர்!






ஆஞ்சநேயருக்கு புகழ்பெற்ற தனிக் கோயில்கள் பல உண்டு. அவற்றில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறிட மட்டைத் தேங்காய் கட்டி பிரார்த்தனை செய்வது வழக்கம்.

ஆனால், நரசிம்மருக்கு என்று அமைந்த ஓர் ஆலயத்தில் ஆஞ்சநேயருக்கு தனிப்பட்ட பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்படுவது வித்தியாசமான ஒன்று. நரசிங்கப்பேட்டை யோக நரசிம்மர் ஆலயத்தில்தான் அப்படி ஒரு பிரார்த்தனை நடைபெறுகிறது.

மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரத்தில் இரணியனை வதம் செய்த பிறகு, அந்த தோஷம் விலக, சிவபெருமானை வேண்டியதாகவும், சிவபெருமான் இங்கே சுயம்புவாகத் தோன்றி அவரது வேண்டுகோளை நிறைவேற்றியதாகவும் தலபுராணம் கூறுகிறது. நரசிம்மர் தியானம் செய்த இத்தலம் நரஸிம்ஹபுரம் என்று வழங்கப்பட்டு தற்போது நரசிங்கப்பேட்டை என மாறியிருக்கிறது.

மூன்று அகல் விளக்குகளை ஏற்றி ஒன்றை ஆஞ்சநேயர் சந்நிதியிலும் மற்ற இரண்டை பெருமாள் சந்நிதியிலும் வைக்கின்றனர். பிறகு மீண்டும் காரிய சித்தி ஆஞ்சநேயர் சந்நிதிக்கு வருகின்றனர். அங்கே மட்டைத் தேங்காயை ஆஞ்சநேயரிடம் வைத்து எடுத்துத் தருகின்றனர். அந்தத் தேங்காயை கையில் வாங்கிக் கொண்டு அமைதியாக, ஆஞ்சநேயரை 11 முறையும், நரசிம்மர் சந்நிதியை மூன்று முறையும் வலம் வருகின்றனர்.

இவ்வாறு செய்தபடி முன் வைக்கப்படும் கோரிக்கை பதினொரு வாரங்களுக்குள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பின்னர் கோயிலுக்குச் சென்று கட்டிய மட்டைத் தேங்காயை அவிழ்த்துவிட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

நரசிங்கம்பேட்டை, கும்பகோணம்-மயிலாடுதுறை பாதையில் உள்ளது. நரசிம்மபுரம் கிராமத்தை ஒட்டி தென்புறத்தில் உள்ளது கோயில்.


"மனோதைர்யம் பெற மனமுருகி வேண்டுவோம்  ஆஞ்சநேயரை" 

No comments:

Post a Comment