Monday, September 10, 2012

உறியடி உற்சவம்



ஸ்ரீரங்கம் கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடி உற்சவம் கோலாகல நிறைவு 




வைணவ திருக்கோவில்களில் "பாஞ்சராத்ர மற்றும் "வைகானசம் என இரண்டு ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. திருப்பதி உள்ளிட்ட கோவில்களில் பின்பற்றப்படும் வைகானசம் முறைப்படி, கடந்த மாதம் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
"பாஞ்சராத்ர முறை பின்பற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தி விழா துவங்கியது. அன்று காலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, ஸ்ரீபண்டார மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து திருமஞ்சனம் கண்டருளினார்.

உறியடி உற்சவம்: பக்தர்களுக்கு ஸேவை சாதித்த பின்னர் மீண்டும் மாலை மூலஸ்தானம் சென்றடைந்தார். நேற்று காலை 7.15 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு கண்டருளினார். காலை 9 மணிக்கு கிருஷ்ணர் சன்னதியை சென்டைந்தார். மாலை 3 மணிக்கு திருச்சி விகையில் கிருஷ்ணருடன் புறப்பட்டு, அம்மாமண்டபம் சாலையில் உள்ள யாதவர் உறியடி மண்டபத்தில் எழுந்தருளினார்.அங்கு சிறப்பு திருவாரதனங்கள் நடந்த பின்னர் மாலை 6.30 மணிக்கு, சித்திரை வீதிகளில் திருவீதியுலா வந்தார். இரவு 8.15 மணிக்கு தெற்கு வாசலில் உள்ள பாதாள கிருஷ்ணன் கோவில் முன் நடந்த உறியடி உற்சவத்தை கண்டருளினார். ஏராளமான பக்தர்கள் உறியடி உற்சவத்தை கண்டுகளித்தனர். இரவு ஒன்பது மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.

No comments:

Post a Comment