Monday, September 3, 2012

இட்லி (எள்ளு) மிளகாய் பொடி

இட்லி (எள்ளு) மிளகாய் பொடி By: Savithri Vasan


இட்லியும், மிளகாய் பொடியும் , நகமும் சதையும்
போலங்க, ஓன்று இல்லாமல் ஓன்று வாழாது
அதுவும் மல்லிப்பூ இட்லி மிளகாய் பொடி இல்லைன்னா
அப்டியே வாடி போய்டும்


இது ஒரு புதுமாதிரியான தயாரிப்பு , என்னடா இவன்
கதை விடறான் , மிளகாய்ப்பொடி காலம் காலமா
எல்லார் வீட்லயும் செய்யறது தானே, நானும் அப்டி
தான் நினைச்சேன் , ஆனா நீங்களே படிச்சு செஞ்சு
பாருங்களேன் , அப்புறம் சொல்லுவீங்க



கடலைப்பருப்பு ,
உளுத்தம் பருப்பு ,
பெருங்காயம்
உப்பு தேவைக்கேற்ப
மிளகாய் வற்றல் (நீட்டு)
எள்ளு
புளி


கடலைப்பருப்பு , உளுத்தம் பருப்பு , இரண்டும்
களைந்து வடிகட்டி , வாணலியில் கொஞ்சம்
எண்ணை விட்டு வறுத்துக்கொள்ளவும்


வாணலியில் எண்ணை விட்டு , எள்ளை
தனியாக வறுத்து வைத்துக்கொள்ளவும்
பிறகு பெருங்காயம் , மிளகாய் வற்றல்
வறுத்துக் கொள்ளவும்.


மிக்சியில் முதலில் பெருங்காயம் , புளி
உப்பு, மிளகாய் போட்டு அரைத்து பின்பு
அதனுடன் வருத்த கடலைப்பருப்பு
உளுத்தம் பருப்பு போட்டு அரைக்கவும்
பிறகு வறுத்த எள்ளை அதனுடன்
சேர்த்து அரைக்கவும் .(கொஞ்சம் கொர
கொரப்பாக அரைத்தால் நல்லது)




இதுல என்ன விசேஷம்னா பொதுவா
பருப்ப நாங்க களயமாட்டோம், ஆனா
இந்த பக்குவம் , களைஞ்சு வடிகட்டி
வறுக்கணும் , சுவை சூப்பர் , செஞ்சு
பாருங்க.

 எனக்கு இந்த ரெசிப்பி
குடுத்தது , என் மைத்துனி ஹேமா மூர்த்தி
(மச்சினி சொன்னா கேட்டுக்கணும் , என்ன
நான் சொல்லறது சரிதானே).... 

நம்ம வீட்ல எப்டி?? ஹ்ம் புரியுது , ஜமாயுங்க !!!!!

No comments:

Post a Comment