Saturday, September 8, 2012

கடலைப்பருப்பு போளி

 கடலைப்பருப்பு  போளி ---------By: Savithri Vasan



இங்கே கூறப்படும் அளவு 12 போளி  செய்யலாம்


கடலைப்பருப்பு  : 1 அழைக்கு
தேங்காய்               : 1 மூடி (துருவியது)
மைதா மாவு         :  2 டம்பளர்
வெல்லம்               : 2 டம்பளர்

முதலில் கடலைப்பருப்பை ஊறவைத்துக்கொள்ளவும் (30 நிமிடம்)


மைதாமாவில் கேசரி பௌடர், உப்பு  ஒரு சிட்டிகை  போட்டு
தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும் பிறகு
அதனுடன் என்னை சேர்த்து பக்குவமாக தயார் செயவும்




ஊறிய கடலைப்பருப்பை குக்கரில் விட்டு 5 விசில் வரும்வரை
வேக வைக்கவும்

வெந்த பருப்பில் உள்ள தண்ணீர் நீக்கி (வடிகட்டி) இதனுடன் வெல்லாம்
தேங்காய் துருவல் சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.




அரைத்த பருப்பு, வெல்ல கலவையை சிறு உருண்டைகளாக
உருட்டி வைத்துக்கொள்ளவும் .



பிசைந்து வைத்த மைதா மாவை , வாழை இலையில் எண்ணை
தடவி அதன் மேல் வைத்து கைகளால் மெல்ல மெல்ல சப்பாத்தி
அளவுக்கு செய்து கொள்ளவும்.

பிறகு பூரண உருண்டையை அதன் மேல் வைத்து நன்றாக
மூடி,  உருண்டயக்கி பிறகு அதை சப்பாத்தி போல் பெரிதாக
கைகளால் தட்டி. வாழை இலையோடு அடுப்பில் தோசைக்கல்
வைத்து அதில் போட்டு சிறிது நேரத்தில் வாழை இலையை
அகற்றி விடவும்.



கல்லில் இருக்கும் போளியை சுற்றி நெய் விட்டு இரண்டு புறமும்
சூடு பண்ணி,  சுவையான  போளியை தயார் செய்யவும்.




தட்ல ரெண்டு போளி  சூடா போட்டு , சும்மா மேல அப்டியே  ரெண்டு ஸ்பூன்
நெய்ய விட்டு , என்னனா சொல்லறது , சாப்டலாமா , வாங்க வாங்க


இது போலி அல்ல  அசல்  போளி


No comments:

Post a Comment