Monday, September 10, 2012

எள்ளுருண்டை

எள்ளுருண்டை :-   By:- Savithri Vasan

வெள்ளை எள்ளு / கருப்பு எள்ளு  , இரண்டும் உண்டு
பெரும்பாலும் கருப்பு எள்ளு திதி தினத்தன்று உபயோகிப்பார்கள்

நாம இப்ப வெள்ளை எள்ளு உபயோகப்படுத்தி இதை செய்யலாம்




வெள்ளை எள்ளு 200 கிராம்
வெல்லம்  1/4 கிலோ

எள்ளை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து
நீர் வடிகட்டி , எள்ளை  வாணலியில் வறுத்துக்கொள்ளவும் .



வெல்லம்  கெட்டிப் பாகு தயார் செய்துவைக்கவும்




வறுத்து வைத்த எள்ளில் , சிறிது சிறிதாக வெல்லப்பாகை
சேர்த்து கிளறவும் , பிறகு சிறு சிறு உருண்டைகளாக
செய்து வைக்கவும் ..




உடலுக்கு நல்லது , உழைக்க , சக்தியை கொடுக்கும்


இது பெரும்பாலும் பிதுர்க்கள் தினத்தன்றே செய்யப்படும்
ஆனால் மற்ற நாட்களில் செய்து சாப்பிடுவதில் தவறில்லை
ஏன் என்றால் , பழமொழி சொல்கின்றது  ................


................."இளைத்தவனுக்கு எள்ளு , கொழுத்தவனுக்கு கொள்ளு"
நீங்க யாரு?




No comments:

Post a Comment