Wednesday, September 5, 2012

கூட்டணி கூட்டு

பெங்களூர் கத்தரிக்காய் கூட்டணி கூட்டு :- By:- Savithri Vasan
(துவரம் பருப்பு - கடலைப்பருப்பு)

                                        பெங்களூர் கத்தரிக்காய் ஒன்று



பருப்பை வேக வைங்க (துவரம் பருப்பு & கடலைப்பருப்பு)
காய் சிறிது சிறிதாக நறுக்குங்க
புளி கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்

பாத்திரத்தில்  காயை போட்டு , புளி கரைசலை விட்டு
2 ஸ்பூன் குழம்பு பொடி போட்டு , பெருங்காயம் , உப்பு
சேர்த்து  அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்

பருப்பு வெந்ததும், அதை கொதிக்கும் குழம்பில் விட்டு
ஒரு 5 நிமிடம் கொதிக்க விடவும் .

கடுகு , உளுத்தம் பருப்பு தாளித்து , கருவேப்பிலை சேர்த்து
தாளிக்கவும்



அவ்ளவுதான் கூட்டணி கூட்டு ரெடி தட்ட போட்டு சாப்டுங்க

ஆனா இதுக்கு கொஞ்சம் தேங்காய் துருவல்
வறுத்து போட்டால் சுவை கூடும் .

இல்லை ஒரு ஸ்பெஷல் பொடி  ஒன்னு இருக்கு
அதை போட்டால் , இன்னமும் சுவை கூடும்

இதப் படிச்சுட்டு அந்த பொடி என்னன்னு தெரிஞ்சுக்கணும்னா
எனக்கு எழுதுங்க , இல்லை கமென்ட் போடுங்க , நான் சொல்லறேன் !!!!

மாறிடும் மனித கூட்டணி , மாறாதது .......சமையல் கூட்டணி
மணக்க வைக்கும்  பெங்களூர் கத்தரிக்காய் கூட்டணி கூட்டு


No comments:

Post a Comment