Saturday, September 8, 2012

மீனாட்சி அம்மன் தங்கக் கோபுரங்கள்!


தக.. தக..வென ஜொலிக்கும் மீனாட்சி அம்மன் தங்கக் கோபுரங்கள்!



நான்கு பக்கங்களிலும் 8 யானைகள், 32 சிங்கங்கள், 64 பூதங்கள் தாங்கும் அதிசயமும், ஆச்சரியமும் ஒரு சேர பார்க்க வேண்டுமானால், நமக்கு கழுகு பார்வை அவசியம். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விமானத்தில் பறந்து பார்க்கும் போது, அந்தக்கோபுரங்கள் மட்டும் நிச்சயம் தக... தக...வென ஜொலிக்கும். அது மீனாட்சி அம்மன், சுவாமி சுந்தரேஸ்வரரின் மூலஸ்தான தங்க கோபுரங்கள்.இதில், சுவாமியின் மூலஸ்தானமான தங்கக்கோபுரத்தைத் தான், யானைகள், சிங்கங்கள், பூதங்கள் தாங்குவது போல் கலைநயத்துடன் வடிவமைத்து இருக்கின்றனர். இதற்கு இந்திரவிமானம் என்று பெயர். பாதுகாப்பு கருதி, தற்போது இதை கோயில் மாடிக்கு சென்று தரிசிக்க அனுமதியில்லை. 

இதனால், நாமும் பாதுகாப்பு கருதி, இந்த மேட்டரை இத்துடன் முடித்துக் கொண்டு, கீழ்த்தளத்தில் உள்ள சுவாமி சன்னதிக்கு செல்வோம். சன்னதி வாசல் இருபுறமும் 12 அடி உயரமுள்ள, ஒரே கல்லால் செய்யப்பட்ட துவார பாலகர்களின் சிலைகள் நம்மை வரவேற்கின்றன. இச்சிலைகள் நான்கரை அடி பீடங்களின் மேல் வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகே தூணில், 5 தலையுடைய சிவபெருமான், பார்வதி வீற்றிருக்கும் காட்சியை காணமுடிகிறது. அடுத்து நம்மை வரவேற்பது, 3 நிலைகள் உடைய சுவாமி சன்னதி கோபுரம். இதை கி.பி. 1168ல் கட்டியவர் குலசேகரபாண்டியன். 
இதனுள் ஆறுகால் பீடம் உள்ளது. இங்கு தான் பரஞ்ஜோதி முனிவரின் திருவிளையாடற் புராணம் அரங்கேற்றப்பட்டது. ஆறுகால் பீடத்தில் உள்ள செப்பிலான துவாரபாலகர் சிலைகளை செய்து கொடுத்தது மன்னர் திருமலை நாயக்கர். சுவாமி மகா மண்டபத்தின் சுற்று மண்டபத்தில் வடக்கு பிரகாரத்தில், சித்தர் சன்னதி உள்ளது. இது 1960-63 திருப்பணியின்போது, சீரமைக்கப்பட்டது. சிதலமடைந்த சித்தர் உருவமும் சீர்செய்யப்பட்டது. மதுரை உருவாவதற்கு முன், கடம்ப வனமாக இருந்ததற்கு சாட்சியாக, இம்மண்டபத்தில் ஆதி கடம்ப மரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அங்கம் குளிர தங்கம் கொண்ட அங்கயற்கண்ணி கோவில் கோபுரங்கள் 
அண்டம் புகழ தங்கத்தில் ஜொலிக்கின்றது 

No comments:

Post a Comment