Thursday, September 6, 2012

பக்குவமான பருப்புப் பொடி

                                                         பருப்புப் பொடி


இதுல பலவகை இருக்கு அப்டின்னு பலபேர் சொல்லறாங்க

நான் செய்யறது இந்த ஒருவகை தான்.

செஞ்சு பாருங்கள் சுவைத்துக் கூறுங்கள்

தேவையானவை:-

துவரம் பருப்பு ........ 1 ஆழாக்கு
கடலைப் பருப்பு ... 3/4 ஆழாக்கு
உளுத்தம் பருப்பு ...1/2 ஆழாக்கு
உப்பு(பொடி/கல்)----தேவைக்கேற்ப
காரப்பொடி................தேவைக்கேற்ப



பருப்புவகைகளை ஒன்றன் இன் ஒன்றாக வருத்துக் கொள்ளவும்
சற்று ஆறட்டும்

எல்லா பருப்ப்களையும் ஒன்றாக கலந்து மிக்சிய்ல்
கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அரைத்து சல்லடையில்
சலித்துக்  கொள்ளவும் .

சலித்த மாவுடன், உப்பு, காரப்பொடி கலந்து
கொஞ்சம் சுவை பார்த்து , உப்பு அல்லது காரம்
தேவை என்றால் , சேர்த்து குறைகளை நிவர்த்தி
செய்யவும்.


சூடான சாதம், 2 ஸ்பூன் பருப்பு பொடி , நெய் அல்லது
நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.

தொட்டுக்கொள்ள
மோர்குழம்பு,
வெத்தக்குழம்பு
சாம்பார்
கூட்டு
ரசம்
பச்சை வெங்காயம்
மாவடு
மாகாளி  இவையாவும் மிகவும் ஏற்றவை

பூண்டு சாப்பிடுபவர்கள்  பொடியில் பூண்டு சேர்க்கலாம்


பருப்பு இல்லாம  கல்யானம் கிடையாது
பருப்பு   பொடி  இல்லாமல் வீடு  கிடையாது




No comments:

Post a Comment