Tuesday, September 11, 2012

குடியிருக்கும் வீட்டுக்குத்தான் சுண்ணாம்பு

                                      குடியிருக்கும் வீட்டுக்குத்தான் சுண்ணாம்பு

   

ஆன்மிக சொற்பொழிவாளர் திருமுருக கிருபானந்த  வாரியாரை
அறியாதவர்களும் இருக்க முடியாது. முருகப்பெருமானின் தீவிர
பக்தராக இருந்தவர் வாரியார் சுவாமிகள்.

சொற்பொழிவின் பொது வார்த்தைகள் வரிசையாகவும் வலிமையாகவும்
அருவிபோல் வந்து கொட்டும். இடையிடையே நகைச்சுவை தேன்
செவி இனிக்கும்.

கிருபானந்த வாரியார் எப்போதும் நெற்றியிலும், அங்கம் முழுதும்
திருநீறு (வீபுதி) பூசிக்கொண்டு சிவப்பழமாக இருப்பார். அவ்வாறு
தோற்றத்துடன் ஒருமுறை புகைவண்டிப் பயணம் மேற்கொண்ட
போது , இடையில் அவர் இருந்த  பெட்டியில் இரண்டு வாலிபர்கள்
ஏறி அமர்ந்தனர் . வாரியாரின் இந்த கோலத்தை கண்டதும் அவர்களுக்கு
ஏளனம் தோன்றியது. உடனே அவரை நையாண்டி செய்யும்  பொருட்டு
ஒருவர் மற்றவரிடம் "என்னப்பா உடல் முழுவதும் சுண்ணாம்பு
பூசி இருக்கிறது" என்று கேட்டார்.

இதை செவியுற்ற வாரியார் அவர்கள் சிறிது கோபம் கொள்ளாமல்
சிறு புன்முறுவல் பூத்து கூறினார் , "குடி இருக்கும் வீட்டுக்கு தான்
 சுண்ணாம்பு பூசுவார்கள் , குட்டிச்சுவருக்கு எல்லாம் சுண்ணாம்பு
அடிக்க மாட்டார்கள்" என்று நய்யாண்டி செய்தவர்களுக்கு நயம்பட
நகவைச்சுவை விருந்து அளித்தார்.

இவரது பேச்சின் பொருள் உணர்ந்த இருவரும் வெட்கித் தலை
குனிந்து தங்கள் இருக்கையை வேறு பெட்டிக்கு மாற்றினர்.


"நீறு பூத்த நெருப்பாக வாழாமல் , திருநீறு பூசிய நெறியோடு வாழுவோம்" 

No comments:

Post a Comment