Friday, September 7, 2012

நாலடியார் - (352/400)

நாலடியார் -  (352/400)
-------------------------------

செழும்பொருள் பொய்கையுள் வாழினும், என்றும்
வழும்பறுக்க கில்லாவாம், தேரை; -- வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும், நுணுக்கமொன்று இல்லாதார்
தேற்கி ற்க்கும் பெற்றி அரிது.


பொருள்:- வளம் கொண்ட, மிகுந்த நீரை உடைய குளத்தில்
வாழ்ந்தாலும் தன் மீது உள்ள வழுவழுப்பான அழுக்கை
நீக்கிக் கொள்ளும் ஆற்றல்  தவளைக்கு  இல்லை. அதுபோல்,
குற்றமற்ற நூல்களை கற்று இருந்தாலும், நுட்பமான அறிவு
இல்லாதவர்கள், அதன் மூலம் தம்மை மேம்படுத்திக்
கொள்ளும் தன்மை இல்லாதவர்களாகவே இருப்பார்கள். 

No comments:

Post a Comment